search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி வசுந்தரா ராஜே"

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தர ராஜே தனது சொந்த ஊரான ஜல்ராபதானில் போட்டியிடுகிறார். #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்ராபதான் தொகுதியில் முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா போட்டியிட முடிவு செய்துள்ளார்.  இதுதொடர்பாக, இன்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜலாவர் மாவட்டத்தில் உள்ள மக்களுடன் கடந்த 30 ஆண்டுகளாக நான் தொடர்பில் இருந்து வந்துள்ளேன். அவர்கள் என் மீது மிகுந்த அன்பும், உறுதியான பற்றும் கொண்டுள்ளனர்.  ஜலாவர் மற்றும் பாரன் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவேன் என தெரிவித்துள்ளார்.

    வசுந்தர ராஜே கடந்த 2003, 2008 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜல்ராபதான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தர ராஜேவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி மனைவி முகுல் சவுத்ரி போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
    ×